குறள் : 1141

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.


மு.வ உரை :

(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

கலைஞர் உரை :

எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்

சாலமன் பாப்பையா உரை :

ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.


Kural 1141

Alarezha Aaruyir Nirkum Adhanaip

Palarariyaar Paakkiyath Thaal

Explanation :

My precious life is saved by the raise of rumor and this to my good luck no others are aware of.


Horoscope Today: Astrological prediction for June 14, 2023இன்றைய ராசிப்பலன் - 14.06.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

14-06-2023, வைகாசி 31, புதன்கிழமை, ஏகாதசி திதி காலை 08.49 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 01.40 வரை பின்பு பரணி. மரணயோகம் பகல் 01.40 வரை பின்பு சித்தயோகம். ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 


இன்றைய ராசிப்பலன் - 14.06.2023 | Today rasi palan - 14.06.2023

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

ரிஷபம்

இன்று எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.

சிம்மம்

இன்று தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும். 

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியான விஷயங்களில் சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

கணித்தவர்


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026