ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (42) இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் பெல் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார். 

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பிரேம்குமார் வேலைக்கு புறப்பட்டார். முகுந்தராயபுரம் பெல் ரோசட்டில் வந்தபோது எதிரே திருவலத்திலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் பிரேம்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரேம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.