குறள் : 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
மு.வ உரை :
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
கலைஞர் உரை :
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன
சாலமன் பாப்பையா உரை :
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.
Kural 1100
Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal
Enna Payanum Ila
Explanation :
The words of the mouths are of no use whatever when there is perfect agreement between the eyes (of lovers).
Horoscope Today: Astrological prediction for May 03, 2023
இன்றைய ராசிப்பலன் - 03.05.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
03-05-2023, சித்திரை 20, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 11.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 08.56 வரை பின்பு சித்திரை. மரணயோகம் இரவு 08.56 வரை பின்பு சித்தயோகம். பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 03.04.2023 | Today rasi palan - 03.04.2023
மேஷம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.
ரிஷபம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும்.
கடகம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த தடை தாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று உறவினர்கள் வகையில் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவீர்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
கும்பம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சேமிப்பு உயரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026