குறள் : 1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
மு.வ உரை :
கயவர் தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால் அறையப்படும் பறை போன்றவர்.
கலைஞர் உரை :
மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்
சாலமன் பாப்பையா உரை :
தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.
Kural 1076
Araiparai Annar Kayavardhaam Ketta
Maraipirarkku Uyththuraikka Laan
Explanation :
The base is like a drum that is beaten for they unburden to others the secrets they have heard.
Horoscope Today: Astrological prediction for April 09, 2023
இன்றைய ராசிப்பலன் - 09.04.2023 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
09-04-2023, பங்குனி 26, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி காலை 09.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. விசாகம் நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 09.04.2023 | Today rasi palan - 09.04.2023
மேஷம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
ரிஷபம்
இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கும்பம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம்
இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001