ராணிப்பேட்டை பகுதியில் கடந்த ஆண்டு சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரபு மேற்பார்வையில், ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் கடந்த 2022ம் ஆண்டு முழுவதும் ராணிப்பேட்டை பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதில், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்கியது பைக்கில் 3 பேர் பயணித்தது. சிருடை அணியாமல் வாகனம் ஓட்டியது. செல்போன் பேசியபட வாகனம் ஓட்டியது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 8,960 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய 95பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா 10,000 வீதம் 195,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.