ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இருந்து ஓசூருக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.
சத்துவாச்சாரி நீதிமன்றம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது லாரியின் டயர் வெடித்தது. இதனால் டிரைவர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வேகமாக வந்த கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் பின்பக்கத்தில் கார் புகுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் முன்பக்கம் இருந்த ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

காரின் பின்பக்கம் இருந்த 2 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.