ஆற்காடு அருகே மின் கசிவு காரணமாக திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை | ஆற்காடு அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் லீஸ் மூலம் லக்ஸ்வெல் சினிமா திரையரங்கம் எடுத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மாலை 6 மணி மற்றும் 9 மணி காட்சிக்கு வாரிசு, துணிவு ஆகிய திரைப்படங்கள் தயார் செய்திருந்த நிலையில் ஆறு மணி திரைப்படக் காட்சிக்கு திரைப்படம் தயார் செய்திருந்த நிலையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் திரையரங்கம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இதனை அடுத்து ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கு தகவலை தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏற்பட்டிருந்த தீயினை அனைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இரண்டு மணி நேரத்தில் தீயினை முற்றிலுமாக அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் காயங்களும் திரைப்படம் காண வந்த பொதுமக்களுக்கு ஏற்படவில்லை. மேலும் தீ விபத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திரையரங்கில் தீயினால் சேதமடைந்து இருப்பதாக திரையரங்கத்தை லீஸ் எடுத்து நடத்தி வரும் ஜெயபிரகாஷ் முதற்கட்ட தகவலாக தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.