Farmers consultation meeting on behalf of agriculture department at Walaja
வாலாஜாவில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
வாலாஜாவில் வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி இயக்குநர் சண்முகம் தலைமை தாங்கி விவசாயிகளுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் தோட்டக்கலை, விற்பனை மற்றும் வணிகம், பட்டு வளர்ச்சி, கால்நடை மற்றும் பயிர்சாகுபடி, நுண்ணுயிர் பாசனதிட்டம் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், அட்மா திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் நித்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.