ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று தென்நந்தியாலம் கூட்ரோடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் வேலூரைச் சேர்ந்த கவியரசு (வயது 22) என்பதும், பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து கவியரசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கவியரசு மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.