வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் டா.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூர் வட்டத்துக்குட்பட்ட வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் கோட்டங்களில் ஏற்படும் மின் தடை, மின் விபத்துகள், அறுந்து விழுந்து கிடக்கும் மேல்நிலை மின் கம்பிகள், மின் மீட்டர் பழுது குறித்த புகார்கள், தாழ்வாக மின்கம்பிகள் இருப்பது உள்ளிட்ட மின்சாரம் சார்ந்த எந்தப் புகார்களையும் வேலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளரின் 6380283535 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் பொது மக்கள் தெரிவிக்கலாம்.
மேலும், கட்டணமில்லா தொலை பேசி எண் 1912, மின்னக தொலை பேசி எண் 9498794987 ஆகிய எண்கள் மூலமும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.