குறள் : 1007

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று.


மு.வ உரை :

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம் மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

கலைஞர் உரை :

வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது

சாலமன் பாப்பையா உரை :

ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.


Kural 1007

Atraarkkondru Aatraadhaan Selvam Mikanalam

Petraal Thamiyalmooth Thatru

Explanation :

The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.

Horoscope Today: Astrological prediction for January 29, 2022



இன்றைய ராசிப்பலன் - 29.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


29-01-2023, தை 15, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி காலை 09.05 வரை பின்பு வளர்பிறை நவமி. பரணி நட்சத்திரம் இரவு 08.21 வரை பின்பு கிருத்திகை. பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.21 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 29.01.2023 | Today rasi palan - 29.01.2023


மேஷம்

இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் தாமதமாகவே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

கடகம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள் தடைப்பட்டிருந்த வேலைகள் இன்று எளிதில் முடிவடையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது.

கன்னி

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.

துலாம்

இன்று குடும்பத்தில் புத்திர வழியில் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின் அறிவுத் திறமையால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராத உதவி மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு

இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்

இன்று உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்பட செய்யும் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினைகள் குறையும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும்.

மீனம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்க கூடும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001