திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான ஆணழகன் போட்டி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் நடந்தது.

இதில் 120-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 65 கிலோ எடை பிரிவில் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பார்த்திபன் (வயது 24) என்பவர் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிக்காட்டி 2-ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.

அவருக்கு பாடி பில்டிங் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பரிசுக்கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை அளித்து பாராட்டினர். பார்த்திபன் வேலூர் ரங்காபுரத்தில் ஜிம்மில் பயிற் சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தபோட்டியின் மூலம் தென்னிந்திய அளவில் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ள ஜூனியர் மிஸ்டர் சவுத் இந்தியன் என்ற ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அவர் கூறுகையில், சிறு வயது முதல் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். அதற்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.