சோளிங்கரில் மைத்துனரை கத்தியால் வெட்டிய மாமா கைது செய்யப்பட்டார்.

Uncle arrested for stabbing brother-in-law in Sholingur 
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (27) ஆட்டோ டிரைவர். இந்நிலையில் வெற்றிவேலின் மைத்துனர் அரிகரன்(23) என்பவருக்கு தவணை முறையில் பைக் வாங்கி கொடுத்துள்ளார். மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணை தொகையை அரிகரன் சரியாக செலுத்தாத நிலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று அரிகரன் வீராணத்திலிருந்து சோளிங்கருக்கு வந்தார். அப்போது கிழக்கு பஜார் பிள்ளையார் கோயில் அருகே சென்ற போது அங்கு வந்த வெற்றிவேல் அரிகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கோபமடைந்த வெற்றிவேல் திடிரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அரிகரனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதில், அரிகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை சோளிங்கர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் எஸ்ஐ ஏழுமலை ஆகியோர் தப்பிச்சென்ற வெற்றிவேலை தக்கான்குளம் அருகே மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.