ஆற்காடு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
Two people were injured in a head-on collision between bikes near Arcot
ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் தனது பைக்கில் நேற்று காலை புதுப்பாடி வந்தார்.
புதுப்பாடி கூட்ரோடு அருகே வந்தபோது கலவை கூட்ரோட்டில் இருந்து வந்த மற்றொரு மணிகண்டன் (35) என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில்
இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் பெரிய குக்குண்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.