ராணிப்பேட்டை மாவட் டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை கிணறு, சூரிய ஒளி மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி 2021- 2022 திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கிராமங்களில் விசை உழவு இயந்திரம் மானியத்தில் வழங்குதல் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து சூரிய ஒளி மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைத்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விசை உழவு இயந்திரம் 26 எண்கள் வழங்க ₹22.10 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 1 எண் ஆழ் துளை கிணறு அமைத்து, மின் மோட்டார்/ சூரிய ஒளி மின் மோட்டார் மற்றும் பைப் லைன் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு 76 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசை உழவு இயந்திரம் சிறுகுறு, மகளிர், எஸ்சி, எஸ்டி விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ₹85 ஆயிரம் என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறு அமைத்தல் பணி, பாதுகாப்பான குறு வட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகிய விவசாயிகள் சாதிச் சான்றிழின் படி 100 சதவீதம் மானியத்தில் அமைக்கப்படுகிறது.
மேற்படி, மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2021-2022 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிரா மங்களில் உள்ள விவசாயிகள் வாலாஜா உதவி செயற்பொறியாளர். வேளாண்மை பொறியியல் துறை,எண்:314. பாலார் அணைக்கட்டு ரோடு, வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அமைந் துள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.