கலவை அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இருந்து கலவை வழியாக, வாழைப்பந்தல் செல்லும் அரசு டவுன் பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொங்கியவாறு பயணம் செய்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கலவை அடுத்த கனியந்தாங்கல் அருகே பின்பக்கப்படியில் இருந்து வாலிபர் கீழே விழுந்ததால் தலை, கால் முட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கலவை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி விசாரணை மேற்கொண்டதில் இடையந்தாங்கல் கிராமம் படவேட்டான் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் மகன் பிரவீன் குமார்(18) வேலூர் முத்துரங்கம் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்என தெரிய வந்தது. 

இதையடுத்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரி வித்தனர். பின்னர், மாணவனின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து பிரவீன் குமார் தந்தை ராஜேஷ், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் பெற்றுக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.