பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
Southern Railway announces cancellation of electric train between Katpadi-Jolarpet due to maintenance work
காட்பாடி-ஜோலார்பேட்டை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (புதன்கிழமை) மற்றும் 19, 21, 24, 26 மற்றும் 28-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
ஜோலார்பேட்டை-காட்பாடி இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று (புதன்கிழமை), 19, 21, 24, 26 மற்றும் 28-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.