ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற் றார். 

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 22 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், புகார் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை உடனடியாக புகார்தாருக்கு தெரிவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ் வரய்யா (தலைமையிடம்), முத்துகருப்பன் (இணைய வழி குற்றப்பிரிவு), உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, ராஜா சுந்தர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.