இந்த ஆண்டின் கடைசி விண்கல் மழை பூமிக்கு மிக அருகில் இன்று வர உள்ளது. 'ஜெமினிட்ஸ்' எனப்படும் இந்த விண்கல் மழை இந்த மாதம் 4ம் தேதி முதல் வானில் தெரிகிறது. ஆனால் இன்று இரவு இது உச்சத்தை எட்டும். 

ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 150 விண்கற்கள் விண்ணில் தெரிய உள்ளது. இந்த விண்கல் மழை நொடிக்கு 70 கி.மீ வேகத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும். தொலைநோக்கி இல்லாமலேயே இவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். 

இன்று மாலை 6.30 மணிக்கு விண்கல் மழை உச்சத்தை எட்டும் என்றும், இரவு 9 மணிக்கு மேல் தெரியும் என்றும் கூறப்படுகிறது.