சென்னையில் இருந்து ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு பெயிண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது.
இந்த லாரி ராணிப்பேட்டை - பொன்னை சாலையில் அக்ராவரம் ரெயில்வே தரைப்பாலத்தை கடக்க முயன்றது.
அப்போது கனரக வாகனங்கள் செல்லாத வகையில் ரெயில்வே துறையால் பாலத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது வேகமாக மோதியது.
இதில் தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அடிப்பகுதி பெயர்ந்து வெளியே வந்தது. லாரியும் தடுப்பு கம்பியில் சிக்கிக்கொண்டது.
டிரைவர் லாரியை பின்னால்நகர்த்த எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.