மாண்ட்ஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் சேதம் விளைந்துள்ளது. இதில் வீடுகள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளது. 

எனவே, மாணவர்கள் யாருக்காவது பாடப்புத்தகங்களும், நோட்டுகளும், கல்வி உபகரணங்களும் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பொருட்கள் வழங்கப்படும். 

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் வழியாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.