தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆண் குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய குடும்ப வருமானம் ரூ.72000க்கு மேல் இருக்கக்கூடாது. குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். 

இந்த திட்டதில் இணைபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். இரு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25,000 வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும். ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்களுக்கு ஒரு முறையும்  இந்த வைப்பு நிதி புதுப்பிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு 18 வயது நிறைந்தவுடன் வைப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டி அந்த பெண்ணுக்கு அளிக்கப்படும். வைப்பு தொகை இருப்பு வைக்கப்பட்ட 6வது ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1800 அந்த பெண்ணிற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.