ஆற்காடு அருகே திடீரென ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் பாகர் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (45). ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். 

நேற்று வழக்கம்போல் புளியமர பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மண் கொட்டியும் மற்றும் தண்ணீரை தெளித்தும் தீயை அணைத்தனர். விரைந்து தீயை அணைத்ததால் பக்கத்தில் இருந்த மற்ற ஆட்டோக்கள் தப்பியது. 

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.