மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில், திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.
After Vijay, Trisha will be paired with Ajith!
இதையடுத்து அவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் கடந்த 20 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்து வரும் திரிஷா, விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள விஜய் 67 படத்தில் உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அஜித்குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்திலும் திரிஷா நாயகியாக நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.