குறள் : 973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
மு.வ உரை :
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர் கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
கலைஞர் உரை :
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்
சாலமன் பாப்பையா உரை :
நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.
Kural 973
Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar
Explanation :
Though (raised) above the base cannot become great though (brought) low the great cannot become base.
Horoscope Today: Astrological prediction for December 25 2022
இன்றைய ராசிப்பலன் - 25.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
25-12-2022, மார்கழி 10, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி காலை 08.24 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 04.51 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.21 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிப்பலன் - 25.12.2022 | Today rasi palan - 25.12.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலம் இருக்கும்.
ரிஷபம்
இன்று உடன் பிறந்தவர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண சுப காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் அனுகூலம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
கடகம்
இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு அமோகமாக இருந்து கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் காரியங்கள் எளிதில் நிறைவேறும்.
மகரம்
இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். மன அமைதி இருக்கும்.
கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீண் செலவுகள் தோன்றும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மீனம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001