குறள் : 966

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.


மு.வ உரை :

மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை ஒருவனுக்கு புகழும் தராது தேவருலகிலும் செலுத்தாது வேறு பயன் என்ன.

கலைஞர் உரை :

இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?

சாலமன் பாப்பையா உரை :

உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?


Kural 966

Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru

Ikazhvaarpin Sendru Nilai

Explanation :

Of what good is it (for the highborn) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.


Horoscope Today: Astrological prediction for December 18 2022


இன்றைய ராசிப்பலன் - 18.12.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam


18-12-2022, மார்கழி 03, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.32 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 10.18 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் | Indraya Raagu Kalam

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 18.12.2022 | Today rasi palan - 18.12.2022


மேஷம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்

இன்று உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் இழுபறி நிலை ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

இன்று எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழச்சிகள் நடைபெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டில் பெண்களுக்கு பணி சுமை ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து அமைதி நிலவும்.

விருச்சிகம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் சேரும்.

தனுசு

இன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

மீனம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001