காட்பாடியில் இருசக்கர வாகன ஷோரூமில் ரூ.69 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்த மேலாளர் உள்பட 3 பேரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகன ஷோரூம் 

வேலூர் சாய்நாதபுரத்தில் இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இதன் மற்றொரு கிளை காட்பாடியில் இயங்கி வருகிறது. இங்கு கே.வி.குப்பம் தாலுகா வடுகன்தாங்கலை சேர்ந்த பிரசாந்த் (வயது 29), கம்மவான்பேட்டை மோட்டுப்பாளையத்தை சேர்ந்த பொற்செல்வன் (வயது 30) ஆகியோர் மேலாளராகவும், வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (23), கணியம்பாடி தினேஷ்குமார் (33) ஆகியோர் ஊழியர்களாகவும் பணியாற்றினர்.

இந்தஷோரூமில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான ஆவணங்கள் சாய்நாத புரத்தில் உள்ள ஷோரூமிற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அவை சரிபார்க்கப் பட்டு வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்துக்கு பதிவெண் பெறுவதற்காக அனுப்பப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சில வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய இருசக்கர வாகனங்களுக்கு பல மாதங்கள் ஆகியும் பதி வெண் வழங்கப்படவில்லை என்று சாய்நாதபுரத்தில் உள்ள ஷோரூமிற்கு சென்று கேள்வி எழுப்பினார்கள். 

ரூ.69% லட்சம் மோசடி

அதனால் அதிர்ச்சி அடைந்தஷோரூம் உரிமையா ளர் வேதாராம் இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் காட்பா டியில் உள்ள ஷோரூமில் இரு சக்கர வாகனங்கள் பெற்றதற்கான ஆவணங்களை காண்பித்தனர். இதையடுத்து வேதாராம் உடனடியாக காட்பாடி ஷோரூமிற்கு சென்று இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, கணக்கு பதிவேடு களை ஆய்வு செய்தார்.

அதில், கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் 11- ந்தேதி வரை 40 இருசக்கர வாகனங்கள் ரூ.69 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும், அதற்கான பணத்தை பிரசாந்த், பொற் செல்வன்,விக்னேஷ்,தினேஷ் குமார் ஆகியோர் நிறுவனத் தின் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

3 பேர் கைது 

இதுகுறித்து வேதாராம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக் கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப் பிரண்டு பூபதிராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில், பிரசாந்த், பொற் செல்வன் உள்பட 4 பேரும் 40 இருசக்கர வாகனங்களை விற்று பண மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து பிரசாந்த், விக்னேஷ்,தினேஷ் குமார் ஆகிய 3 பேரையும்போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய பொற்செல்வனை தீவிரமாக போலீசார் தேடி வருகிறார்கள்.