தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 204 குளங்கள் முழுவதும் நிரம்பின..
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.. இதன்காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 369 குளங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அதில் 204 குளங்கள் முழுமையாக நிரம்பின.
இவற்றில் ஒரு குளம் மட்டும் 99 சதவீதம் நிரம்பியுள்ளது 56 குளங்கள் 75 சதவீதமும் 90 குளங்கள 50 சதவீதமும் நிரம்பின. 18 குளங்கள்25சதவீதத்திற்கும் கீழ் நிரம்பி இருக்கின்றன.