காஞ்சிபுரம் அருகேயுள்ள பழைமை வாய்ந்த இளையனார் வேலூர் முருகன் கோயில் ராஜகோபுரத்தில் சனிக்கிழமை இடிதாக்கியதில் கோபுரகலசம் ஒன்று சேதமடைந்தது.
காஞ்சிபுரம் அருகேயுள்ளது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இளையனார் வேலூர் முருகன் கோயில் அசுரர்களை அழிக்க முருகப்பெருமான் வேல் வீசியபோது அந்த வேல் இந்த ஊரில் விழுந்ததால் இப்பகுதி இளையனார் வேலூர் என்ற பெயரானதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. 

இந்தக் கோயில் 5 நிலைகளையுடைய ராஜகோபுரத்தின் மீது 7 கோபுர கலசங்கள் உள்ளன. கோபுரத்தின் 5-ஆவது கலசத்தின் மீது சனிக்கிழமை இடி தாக்கியது. இதில் அந்தக் கலசம் சேதமடைந்தது. 

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது.