சென்னை- பெங்களூரு அதிவிரைவு சாலை பணிக்காக பாணாவரத்தில் இன்றும் நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Power cut in Panavaram today and tomorrow for Chennai-Bengaluru Expressway work

பாணாவரம் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதையில் உள்ள கம்பங்களை சென்னை- பெங்களூரு அதிவவிரைவு சாலை பணிக்காக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பாணவாரம், ரங்காபுரம், வெங்கடேஸ்வரா நகர், மாங்குப்பம் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேல்வீராணம், கோவிந்தசேரி, மங்களம், பொன்னப்பதாங்கல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மேல்வெங்காடபுரம் உதவி செயற்பொறியாளர் உமாசந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.