ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் நந்தி மங்குலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் கவிதா (32). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததாம். இதற்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து அவரது சடலம் சோளிங்கரில் உள்ள பிரகாஷ் நகருக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு உள்ளாட்சிதுறை அதிகாரிகள், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடல் நலக்குறைவால் இறந்த ஊராட்சி மன்ற தலைவர் கவிதாவின் கணவர் நரசிம்மன் சமூக ஆர்வலராக உள்ளார்.
இவர்களுக்கு 4 வயதில் மகன், 8 மாத ஆண் குழந்தை உள்ளது.