வாலாஜாபேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 83 ஆண்டுகள் பழமையான 10 டன் எடையுள்ள காட்டுவா மரத்தை சட்ட விரோதமாக வெட்டிய மர்ம கும்பல் அதனை விற்பனை செய்ய கடத்தி செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாலாஜாபேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் மிகவும் பழமையான காட்டுவா மரம் உள்ளது. 10 டன் எடை கொண்ட இந்த காட்டுவா மரத்தை, எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டிய மர்ம கும்பல் அதை கடத்த முயன்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது சட்டவிரோதமாக மரத்தை வெட்டி விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து வெட்டப்பட்ட மரத்துண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மரம் வெட்டியதாக ஒருவரை பிடித்து வாலாஜாப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.