குறள் : 944

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.


மு.வ உரை :

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

கலைஞர் உரை :

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

சாலமன் பாப்பையா உரை :

முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.


Kural 944

Atradhu Arindhu Kataippitiththu Maaralla

Thuykka Thuvarap Pasiththu

Explanation :

(First) assure yourself that your food has been digested and never fail to eat when very hungry whatever is not disagreeable (to you).


Horoscope Today: Astrological prediction for November 25 2022


இன்றைய ராசிப்பலன் - 25.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



25-11-2022, கார்த்திகை 09, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 10.35 வரை பின்பு வளர்பிறை திரிதியை. கேட்டை நட்சத்திரம் மாலை 05.21 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 05.21 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 25.11.2022 | Today rasi palan - 25.11.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அலுவலகத்தில் வேலைபளு கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது, பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

ரிஷபம்

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். வேலையில் தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.21 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த வேலையை முடிப்பதில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிப்பீர்கள். வருமானம் பெருகும்.

கன்னி

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். 

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உற்றார் உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.

கும்பம்

இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

மீனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மனைவி வழி உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.


கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001