குறள் : 943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
மு.வ உரை :
முன் உண்ட உணவு செரித்துவிட்டால் பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும் அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
கலைஞர் உரை :
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்
சாலமன் பாப்பையா உரை :
முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
Kural 943
Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru
Explanation :
If (ones food has been) digested let one eat with moderation (for) that is the way to prolong the life of an embodied soul.
Horoscope Today: Astrological prediction for November 24 2022
இன்றைய ராசிப்பலன் - 24.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
24-11-2022, கார்த்திகை 08, வியாழக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.38 வரை பின்பு வளர்பிறை துதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 07.37 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 07.37 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. தனிய நாள். வாஸ்து நாள் பகல் 11.09 மணி முதல் 11.45 மணி வரை.
இராகு காலம் | Indraya Raagu Kalam
மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிப்பலன் - 24.11.2022 | Today rasi palan - 24.11.2022
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி, வாகனங்களால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
விருச்சிகம்
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.