குறள் : 927

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

மு.வ உரை :

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர் உள்ளரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

கலைஞர் உரை :

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்

சாலமன் பாப்பையா உரை :

போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.

Kural 927

Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum
Kallotrik Kansaai Pavar

Explanation :

Those who always intoxicate themselves by a private (indulgence in) drink will have their secrets detected and laughed at by their fellow townsmen.

Horoscope Today: Astrological prediction for November 08 2022



இன்றைய ராசிப்பலன் - 07.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



08-11-2022, ஐப்பசி 22, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.32 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பரணி நட்சத்திரம் பின்இரவு 01.38 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. சந்திர கிரஹணம் பகல் 2.38 மணி முதல் 6.19 மணி வரை. 

இராகு காலம் | Indraya Raagu Kalam 

மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் - 08.11.2022 | Today rasi palan - 08.11.2022

மேஷம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். ஒரு சிலருக்கு வெளிமாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பழைய கடன்கள் குறையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்மந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் நற்பலன் கிடைக்கும்.

கடகம்

இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். 

சிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். 

கன்னி

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மகரம்

இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.

மீனம்

இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடன்பிறப்பிடம் ஒற்றுமை குறையும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001