குறள் : 926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
மு.வ உரை :
உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர் அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.
கலைஞர் உரை :
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்
சாலமன் பாப்பையா உரை :
உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.
Kural 926
Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum
Nanjunpaar Kallun Pavar
Explanation :
They that sleep resemble the deed (likewise) they that drink are no other than poison eaters.
Horoscope Today: Astrological prediction for November 07 2022
இன்றைய ராசிப்பலன் - 07.11.2022 | Indraya Nalla Neram | Indraya Panchangam
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
07-11-2022, ஐப்பசி 21, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 04.16 வரை வளர்பிறை பின்பு பௌர்ணமி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பௌர்ணமி விரதம். அன்னாபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். குருநானக் ஜெயந்தி. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் | Indraya Raagu Kalam
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 07.11.2022 | Today rasi palan - 07.11.2022
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எடுத்த வேலை பாதியில் தடைப்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகேற்ப உயர்வு கிட்டும். வியாபார ரீதியான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வருமானம் பெருகும்.
கடகம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது.
துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான சிக்கல்கள் விலகி மன நிம்மதி உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் அனுகூலமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானத்துடன் செயல்படுவது உத்தமம்.
மகரம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடியை தவிர்க்கலாம்.
கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைக்கும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001