ராணிப்பேட்டையில் நவ.11, 25 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நவ.11 மற்றும் 25 ஆகிய தினங்களில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.