அரக்கோ ணம் அருகே சின்னகைனூர் கிராமத்தில் மின் பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரக்கோணத்தை அடுத்த கைனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னகைனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார் (52). மின் பணியாளர். இவர், தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை இரவு வீட்டைப் பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் உறங்கியுள்ளார்.
காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக் கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, ரூ.10,000 திருடு போயிருந்தது.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.