வாலாஜா அருகே பாலாறு அணைக்கட்டில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாராவது கொலை செய்து சடலத்தை வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜா அருகே பாலாறு அணக்கட்டு உள்ளது. இங்கிருந்து சாத்தம்பாக்கம் கால்வாயில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஒரு இளம் பெண் சடலம் நீரில் உள்ள செடிகொடிகளுக்கிடையே மிதப்பதாக அப்பகுதியிலுள்ள மக்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர். இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண் சுடிதார் அணிந்து இருந்தார். மேலும் அவர் இறந்து பத்து நாட்களுக்கு மேலாகியிருக்கும் என்று போலீ சார் தெரிவித்தனர். 

அவர் யார்? எந்த ஊர்? மேலும் அவர் கொலை செய்யப்பட்டரா அல்லது தற்செயலாக நீரில் முழ்கி இறந்து போய் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரு 
கின்றனர். மேலும் போலீ சார் இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்டமாக சமீபத்தில் இளம்பெண் மாயமான தாக காவல் நிலையங்களில் வந்த புகார் விவரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.