பொன்னை அருகே நாய் குட்டிக்கு குரங்கு பால் கொடுத்து 4 நாட்களுக்கும் மேலாக பராமரித்து வருவது மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை 4 ரோடு பகுதியில் நாய் குட்டி ஒன்று தாய் நாய் இல்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

பராமரிப்பின்றி சுற்றித்திரிந்த நாய்க்குட்டியை அந்த பகுதியில் இருந்த பெண் குரங்கு ஒன்று கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பராமரித்து வருகிறது. எங்கு சென்றாலும் நாய் குட்டியை தூக்கி செல்வதுடன் அவ்வப்போது நாய் குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசயம் நடந்து வருகின்றது.

இந்த அரிய சம்பவம் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் குரங்கு மற்றும் குட்டிக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை கொடுத்து பராமரித்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.