ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழுவின் சார்பில் 83குழுந்தைகள் மற்றும் சிறுமியர் அடுத்தடுத்து பல்வேறு பாடல் தொடர்ச்சியாக 13 1/2 மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழுவகுப்புகள் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும், குழந்தைகளும் நடன கலை பயின்று வருகின்றனர்.

இந்தக் குழுவின் சார்பில் உலக சாதனை படைக்கும் முயற்சியாக, 83 சிறுமிகள் மற்றும் குழந்தைகள் இணைந்து தொடர்ச்சியாக 13 1/2 மணி நேரம் தொடர்ச்சியாக நடணமாடினர். தனித்தனியாகவும், குழுவாக சேர்ந்து பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்தது.