Women's Free Buses will turn pink in Vellore, Tirupattur, Ranipet districts, officials of Transport Corporation informed.


தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக லவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்கான கோப்புகளில் கையெழுத் திட்டார்.

இந்த இலவச பஸ்களை அடையாளம் காணுவதில் பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே இலவச பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் பஸ்ஸின் முன் மற்றும் பின் பகுதியில் பிங்க்கலரில் மாற்றப்பட்டு சென்னையில் முதல் முதலாக இயக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக கோட்டங்களில் செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் இலவச பஸ்கள் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் பிங்க் கலராக மாற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 231டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இலவச பஸ்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 6 பஸ்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 பஸ்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பஸ்களும் பிங்க்நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இனி எப்சிக்கு வரும் டவுன் பஸ்கள் அனைத்தும் பிங்க்நிறத்திற்கு மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.