திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை சேர்ந்தவர் தினேஷ். அவரது மனைவி வாசகி. இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் கிராமத்தில் உறவினர், வீட்டுக்கு வந்து டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

செய்யாறு டூ ஆற்காடு சாலையில் தனியார் கல்லூரி அருகே வாசகியின் சேலை பைக் பின்சக்கரத்தில் சிக்கியது. இதனால் அவர்தடுமாறி சாலையில் விழுந்தார். 

அவர் தலை, கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும். வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி பெற்றனர்.

மேல்சிகிச்சைக்காக சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.