👉 1931ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளை கண்டறிந்த தாமஸ் ஆல்வா எடிசன் மறைந்தார்.


👉 1954ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.


முக்கிய தினம் :-


உலக வாசெக்டொமி தினம் 

🌷 உலக வாசெக்டொமி (vasectomy) தினம் அக்டோபர் 18ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகளவில் அளவான குடும்பங்களை ஏற்படுத்த ஆண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்கிற விழிப்புணர்வை கொண்டுவர இத்தினம் 2013ல் அறிவிக்கப்பட்டது.


நினைவு நாள் :-


சார்லஸ் பாபேஜ்

🌷 கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

🌷 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.

🌷 தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

🌷 இவர் நியமத் தொடருந்துப் பாதை (Difference Engine) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


ஓம் பூரி 

✍ இந்திய நடிகர் ஓம் பூரி 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி ஹரியானாவிலுள்ள அம்பாலாவில் பிறந்தார்.

✍ இவர் பல பாகிஸ்தானிய, இந்திய, இங்கிலாந்து மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

✍ இவர் சுதந்திர போராட்ட திரைப்படங்களிலும், மாறுபட்ட கலைப்படங்களிலும் பங்காற்றியுள்ளார்.

✍ இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இன்றைய நிகழ்வுகள்


320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார்.

1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது.

1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான்.

1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர்.

1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது.

1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர்.

1648 – அமெரிக்காவின் முதலாவது தொழிற்சங்கத்தை பாஸ்டன் செம்மார்கள் ஆரம்பித்தனர்.

1679 – கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் காப்டன் இராபர்ட் நொக்சு அங்கிருந்து தப்பி மன்னார் அரிப்பு என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.[1]

1748 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது.

1860 – இரண்டாம் அபினிப் போர் முடிவுக்கு வந்த்து.

1867 – உருசியப் பேரரசிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை ஐக்கிய அமெரிக்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது. இந்நாள் அலாஸ்கா நாள் எனக் கொண்டாடப்படுகிறது.

1898 – ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ ரிக்கோவை எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.

1912 – முதலாம் பால்கான் போர்: செர்பிய மன்னர் முதலாம் பீட்டர் தனது நாடு போரில் இறங்குகிறது என செர்பிய மக்களுக்கு அறிவித்தார்.

1921 – சோவியத் ஒன்றியத்தில் கிரிமிய தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது.

1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.

1944 – சோவியத் ஒன்றியம் செக்கோசிலோவாக்கியாவை முற்றுகையிட்டு நாட்சி ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றியது.

1945 – வெனிசுவேலாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் இசாயசு மெதினா அங்கரீட்டா பதவியிழந்தார்.

1946 – இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இரவுத் தொடருந்து அனுராதபுரத்திற்கு அருகாமையில் இரத்மலை என்ற இடத்தில் தடம் புரண்டதில் நால்வர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.[2]

1954 – அமெரிக்காவின் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது.

1963 – பெலிசேட் விண்வெளிக்கு சென்ற முதலாவது பூனை என்ற பெயரைப் பெற்றது.

1967 – சோவியத் விண்கலம் வெனேரா 4 வெள்ளிக் கோளை அடைந்தது. வேறொரு கோளின் வளிமண்டலத்தை அளந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது.

2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.

2006 – ஈழப்போர்: காலி கடற்படைத்தளத்தில் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் பல கடற்படைக் கலங்கள் அழிக்கப்பட்டன.

2007 – கராச்சியில் முன்னாள் பாக்கித்தான் பிரதமர் பெனசீர் பூட்டோ மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 139 பேர் கொல்லப்பட்டனர், 450 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பூட்டோ காயமெதுவுமின்றி தப்பினார்.

2011 – ஐந்தாண்டுகள் அமாசின் கைதியாக இருந்த இசுரேலிய இராணுவ வீரர் கிலாத் சாலித் விடுவிக்கப்பட்டார்.

இன்றைய பிறப்புகள்


1130 – சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200)

1859 – என்றி பெர்குசன், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1941)

1882 – பல்லடம் சஞ்சீவ ராவ், தமிழக புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)

1910 – வி. நவரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 2006)

1915 – மகாதேவன் சதாசிவம், இலங்கைத் துடுபாட்ட வீரர் (இ. 1977)

1925 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (இ. 2018)

1950 – ஓம் பூரி, இந்திய நடிகர் (இ. 2017)

1952 – ரோய் டயஸ், இலங்கைத் துடுப்பாளர்

1956 – மார்ட்டினா நவரத்திலோவா, செக்-அமெரிக்க டென்னிசு வீராங்கனை

1960 – ஜான் குளோட் வான் டாம், பெல்சிய நடிகர்

1965 – சாகிர் நாயக், இந்திய இசுலாமிய மதகுரு

1973 – ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2014)

1974 – அமீஷ் திரிபாதி, இந்திய நூலாசிரியர்

1978 – ஜோதிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1978 – செந்தில் குமார், தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், ஊடகவியலாளர்

1984 – பிரீடா பின்டோ, இந்திய நடிகை

1987 – சாக் எப்ரான், அமெரிக்க நடிகர்

இன்றைய இறப்புகள்


1417 – பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326)

1775 – சிலுவையின் புனித பவுல், இத்தாலிய கிறித்தவ புனிதர், திருப்பாடுகள் சபை நிறுவனர் (பி. 1694)

1871 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக் கணிதவியலாளர், பொறியியலாளர் (பி. 1791)

1931 – தாமசு ஆல்வா எடிசன், கிராமபோனைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1847)

1934 – சான்டியாகோ ரமோன் கசல், நோபல் பரிசு பெற்ற எசுப்பானிய மருத்துவர் (பி. 1852)

1966 – எலிசபெத் ஆர்டன், கனடிய-அமெரிக்க தொழிலதிபர் (பி. 1878)

1985 – கே. ஆர். ராம்சிங், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1915)

2004 – வீரப்பன், சந்தனக் கடத்தல்காரர், (பி. 1952)

2015 – தமிழினி, விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)

2018 – நா. த. திவாரி, இந்திய அரசியல்வாதி (பி. 1925)

இன்றைய சிறப்பு நாள்


புனித லூக்கா விழா

அலாஸ்கா நாள் (அலாஸ்கா, அமெரிக்கா)

விடுதலை நாள் (அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)