🌷1905ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியில், இந்தியாவில் வங்கப் பிரிவினை நடைபெற்றது.


🌷 1974ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்தார்.


முக்கிய தினம் :-


உலக உணவு தினம்

🌷 உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


உலக மயக்கவியல் தினம் 

💉 1847ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லூரியில், முதன்முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக மயக்கவியல் தினமாக (உலக அனஸ்தீஸியா தினம் (அ) ஈதர் தினம்) கடைபிடிக்கப்படுகிறது.


நினைவு நாள் :-


வீரபாண்டிய கட்டபொம்மன்

🌟 ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.

🌟 பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக, பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக்கும் ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடமிருந்து வரி வசூலிக்க முடியவில்லை.

🌟 1797ஆம் ஆண்டு கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன் ஆங்கிலேயத் தளபதி ஆலன் வந்தார். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பின்பு நெல்லை கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு இவரை அழைத்தார்.

🌟 ஆனால் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்காமல் வௌ;வேறு இடங்களுக்கு வரச் சொல்லிய ஜாக்ஸன், இறுதியாக ராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது, கட்டபொம்மனை கைது செய்ய முயற்சித்தனர். கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சிக்கு திரும்பினார்.

🌟 இந்த சந்திப்பின்போது வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார். உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள் என்று கட்டபொம்மன் துணிச்சலாக அவரிடம் கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள்.

🌟 இறுதியாக கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு எதிராகப் போராடினேன் என கம்பீரத்துடன் முழங்கிய இவர் 1799ஆம் ஆண்டு கயத்தாறில் 39வது வயதில் அக்டோபர் 16ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.


பிறந்த நாள் :-


நோவா வெப்ஸ்டர்

🌹 அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணத்திற்கும், எழுத்திலக்கணத்திற்கும் காரணியான நோவா வெப்ஸ்டர் 1758 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி மேற்கு ஹார்ட்பர்டில் பிறந்தார். இவர் பள்ளிப் புத்தகங்களை எழுதினார். அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்க புத்தகங்களையே கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

🌹 1783 இல், முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

🌹 1828 இல், முதல் அமெரிக்க ஆங்கில அகராதியான வெஸ்டரின் அகராதியை வெளியிட்டவரும் இவரே. இவர் 1843 ஆம் ஆண்டு காலமானார்.

இன்றைய நிகழ்வுகள்


690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார்.

1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார்.

1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார்.

1736 – வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற கணிதவியலாளர் எதிர்வு கூறினார்.[1]

1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய இங்கிலாந்தில் அமெரிக்கப் பழங்குடிகள் மீதான கடைசி பிரித்தானியரின் கடைசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

1780 – 1780 இன் மிகப்பெரும் சூறாவளி ஆறாவது நாளில் முடிவுக்கு வந்தது, சிறிய அந்திலீசில் 20,000 முதல் 24,000 பேர் வரை உயிரிழந்தனர்.[2]

1793 – பிரெஞ்சுப் புரட்சியின் உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

1793 – வாட்டிக்னீசு போரில் பிரான்சு வெற்றி பெற்றது.

1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.

1813 – ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.

1846 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்.

1859 – கண்டி திருமணச் சட்டத்தில் பலகணவர் மணம் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.[3]

1869 – இங்கிலாந்தில் பெகளுக்கான முதலாவது விடுதியுடன் கூடிய கல்லூரி கேம்பிரிட்ச் கிர்ட்டன் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

1905 – உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1916 – மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.

1919 – இட்லர் முதல்தடவையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.[4]

1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1934 – குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.

1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.

1946 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

1949 – கிரேக்கக் கம்யூனிசத் தலைவர் நிக்கலாசு சக்காரியாடிசு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1951 – பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது.

1964 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் பிரதமராகவும் பதவியேற்றனர்.

1964 – சீனா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1968 – யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1973 – என்றி கிசிஞ்சர், வியட்நாம் கயூனிஸ்டுக் கட்சித் தலைவர் லே டூக் தோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1975 – ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1975 – பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.

1978 – கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984 – தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1986 – அனைத்து 14 எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகளிலும் ஏறிய முதல் மனிதராக ரைன்ஹோல்ட் மெஸ்னெர் சாதனை புரிந்தார்.

1987 – தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில் 23 பேர் உயிரிழந்தனர்.

1993 – இங்கிலாந்தில் நாட்சிகளுக்கெதிரான கலவரம் வெடித்தது.

1996 – குவாத்தமாலாவில் உதைப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 84 பேர் உயிரிழந்தனர்.

1998 – சிலியின் முன்னாள் சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

2002 – பண்டைய அலெக்சாந்திரியா நூலகம் மீண்டும் திறக்கப்பட்டது.

2003 – தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.

2006 – ஈழப்போர்: இலங்கை, அபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2006 – இலங்கையில் 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2013 – லாவோசில் லாவோ ஏர்லைன்சு விமானம் ஒன்று தரையில் மோதியதில் 49 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய பிறப்புகள்


1700 – ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1765)

1758 – நோவா வெப்ஸ்டர், அமெரிக்க அகராதியியலாளர் (இ. 1843)

1854 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (இ. 1900)

1873 – இலெவ் சுகாயெவ், உருசிய வேதியியலாளர் (இ. 1922)

1878 – வள்ளத்தோள் நாராயண மேனன், மலையாள எழுத்தாளர் (இ. 1958)

1881 – மு. கதிரேசச் செட்டியார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)

1886 – டேவிட் பென்-குரியன், இசுரேலின் 1வது பிரதமர் (இ. 1973)

1890 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (இ. 1902)

1916 – திக்குறிசி சுகுமாரன், மலையாளத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் (இ. 1997)

1918 – லூயி அல்தூசர், அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1990)

1923 – புலியூர்க் கேசிகன், தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சொற்பொழிவாளர் (இ. 1992)

1923 – சிறில் பொன்னம்பெரும, இலங்கை அறிவியலாளர், வேதியியலாளர் (இ. 1994)

1925 – ஏஞ்சலா லேன்சுபரி, அமெரிக்க-ஆங்கிலேய நடிகை

1927 – கூன்டர் கிராசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (இ. 2015)

1946 – நவீன் பட்நாய்க், ஒரிய இந்திய அரசியல்வாதி

1948 – ஹேம மாலினி, இந்திய நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி

1949 – கிரேசி மோகன், தென்னிந்திய நடிகர், நாடகாசிரியர் (இ. 2019

1963 – சூசை, கடற்புலிகளின் தலைவர் (இ. 2009)

1975 – ஜாக் கலிஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

1977 – ஜான் மேயர், அமெரிக்கப் பாடகர், இசைக் கலைஞர்

1982 – பிரித்விராஜ் சுகுமாரன், இந்திய நடிகர், பாடகர்

1990 – அனிருத் ரவிச்சந்திரன், இந்திய நடிகர், பாடகர்

இன்றைய இறப்புகள்


1799 – கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன், விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1760)

1946 – ஆல்பிரட் ரோசன்பெர்க், எசுத்தோனிய அரசியல்வாதி, நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தினால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர் (பி. 1893)

1951 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (பி. 1895)

1956 – ஜூல்ஸ் ரிமெட், பிரான்சியத் தொழிலதிபர் (பி. 1873)

1974 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1895)

1981 – ஆர். முத்துராமன், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1929)

1983 – ஹரிஷ்-சந்திரா, இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1923)

1998 – ஜான் பாஸ்டல், அமெரிக்கக் கணினியியலாளர் (பி. 1943)

இன்றைய சிறப்பு நாள்


ஆசிரியர் நாள் (சிலி)

மயக்கவியல் நாள்

உலக உணவு நாள்