🌹 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதலாவது செயற்கை கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
முக்கிய தினம் :-
உலக விலங்குகள் தினம்
🌺 விலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. உலகில் பலவித விலங்குகள், நமக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது, அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தாலியைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், இத்தினம் உருவாக்கப்பட்டது.
உலக விண்வெளி வாரம்
🌻 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்காக தங்கள் பங்களிப்பை கொடுத்து வரும் உலக விண்வெளி வார கழக வாரியத்தின் பணிப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு ஐ.நா பொதுசபையால் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
நினைவு நாள் :-
🌹 1947ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாட்டை நிறுவிய மேக்ஸ் பிளாங்க் மறைந்தார்.
பிறந்த நாள் :-
சுப்பிரமணிய சிவா
🌷 விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.
🌷 திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்று திரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். இவர் ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பின் ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.
🌷 'ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்' என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நலம் பாதிக்கப்பட்டு 40வது வயதில் (1925) மறைந்தார்.
திருப்பூர் குமரன்
🌸 இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார்.
🌸 இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார், குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின், பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.
🌸 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவாக வீரத்திற்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.
🌸 காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தே மாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.
இன்றைய நிகழ்வுகள்
23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார்.
1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார்.
1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது.
1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின.
1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1636 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் இராணுவம் புனித உரோமைப் பேரரசு, சாக்சனி இராணுவத்தை விட்சுடொக் சமரில் தோற்கடித்தது.
1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜார்ஜ் வாசிங்டனின் படைகளை வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.
1824 – மெக்சிகோ குடியரசு ஆகியது.
1830 – பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
1853 – கிரிமியப் போர்: உதுமானியப் பேரரசு உருசியா மீது போர் தொடுத்தது.
1883 – ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் விரைவுத் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1918 – அமெரிக்காவில் நியூ செர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.
1957 – பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள இனவாதிகள் கண்டிக்கு நடைப்பயணம் நடத்தினர்.
1957 – புவியைச் சுற்றி வந்த முதலாவது செயற்கைக்கோள் என்ற சாதனையை சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் 1 ஏற்படுத்தியது.
1959 – லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
1960 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் விமானம் ஒன்று பறவையினால் தாக்கப்பட்டதை அடுத்து வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 72 பேரில் 62 பேர் உயிரிழந்தனர்.
1963 – கியூபா, எயிட்டி ஆகிய நாடுகளைத் சூறாவளி புளோரா தாக்கியதில் 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1966 – பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1985 – கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
1992 – மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1992 – ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர்.
1993 – உருசியத் தலைவர் போரிசு யெல்ட்சினுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தாங்கிகள் நாடாளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசின.
1997 – ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.
2001 – சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் உயிரிழந்தனர்.
2003 – இசுரேலில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – விக்கிலீக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய பிறப்புகள்
1542 – ராபர்ட் பெல்லார்மின், இத்தாலியப் புனிதர் (இ. 1621)
1840 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (இ. 1919)
1884 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், எழுத்தாளர் (இ. 1925)
1895 – பஸ்டர் கீடன், அமெரிக்கத் திரைப்பட நடிகர். இயக்குநர் (இ. 1966)
1904 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)
1911 – ஏ. எம். ஏ. அசீஸ், இலங்கை கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1973)
1916 – வித்தாலி கீன்ஸ்புர்க், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 2009)
1918 – கெனிச்சி புகுயி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய வேதியியலாளர் (இ. 1998)
1923 – சார்ள்டன் ஹெஸ்டன், அமெரிக்க நடிகர் (இ. 2008)
1926 – வி. மாணிக்கவாசகம், மலேசிய அரசியல்வாதி
1926 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (இ. 1999)
1928 – ஆல்வின் டாப்லர், செருமானிய-அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2016)
1930 – அனிருத் லால் நகர், இந்தியப் பொருளியலாளர் (இ. 2014)
1931 – பேசில் ட'ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர், (இ. 2011)
1936 – கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டடக் கலைஞர்
1938 – குர்த் வியூத்ரிச், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து வேதியியலாளர்
1941 – மணிசங்கர் அய்யர், இந்திய அரசியல்வாதி
1942 – ரி. ராஜகோபால், இலங்கையின் மேடை, வானொலி நடிகர்
1975 – சங்கவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1989 – டகோட்டா ஜோன்சன், அமெரிக்க நடிகை
இன்றைய இறப்புகள்
1226 – அசிசியின் பிரான்சிசு (பி. 1182)
1582 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (பி. 1515)
1669 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)
1904 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சியச் சிற்பி (பி. 1834)
1904 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (பி. 1847)
1947 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1858)
1972 – சேனரத் பரணவிதான, இலங்கை தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (பி. 1896)
1982 – கோபால் சுவரூப் பதக், இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1896)
1986 – சரளாதேவி, இந்திய சுதந்திர இயக்க செயற்பாட்டாளர், பெண்ணியவாதி, எழுத்தாளர் (பி. 1904)
1992 – எர்பர்ட் தம்பையா, இலங்கை நீதிபதி (பி. 1926)
1998 – சாலை இளந்திரையன், தமிழகத் தமிழறிஞர், திறனாய்வாளர், சொற்பொழிவாளர், அரசியற் செயற்பாட்டாளர், தமிழ்த் தேசியவாதி (பி. 1930)
2009 – பசவ பிரேமானந்த், கேரளப் பகுத்தறிவாளர் (பி. 1930)
2011 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்க கணினி அறிவியலாளர், உணரறிவியல் அறிஞர் (பி. 1927)
2013 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தளபதி, அரசியல்வாதி (பி. 1911)
இன்றைய சிறப்பு நாள்
விடுதலை நாள் (லெசோத்தோ, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
உலக விலங்கு நாள்
உலக விண்வெளி வாரம் ஆரம்பம் (அக். 4 - 10)