வாலாஜாபேட்டை அடுத்த சென்ன சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (22), தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி அமிர்தவல்லி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்தி, வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.