தீபாவளி சிறப்பு பரிகாரங்கள்

தீபாவளியன்று வீட்டில் செய்ய வேண்டிய 
லஷ்மி குபேர பூஜை


இந்த தீபாவளி திருநாளில் செய்ய வேண்டிய சில முக்கிய பரிகாரங்களை இந்த தீபாவளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாருக்குரிய நாள் என்றே கூறலாம்.

1.இந்த தீபாவளி திரு நாளில் தீபங்களை ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். 

2.இந்த தீபாவளி திருநாளில் புதியதுடைப்பத்தால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்,வறுமையை நீக்கும்.

3.மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்த தீபாவளி திருநாளில் தானம் செய்யவும்.

4.இந்த தீபாவளி திருநாளில்
கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும்.அடுத்த வருடம் தீபாவளி நாள் அன்று இந்த கொட்டை பாக்கை ஓடும் நீரில் விட்டு இதே போன்று புதிதாக கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தே
வியின் படத்தில் மாலையாக இட்டு வழிபடவும்.
5.வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்த தீபாவளி திருநாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

6.இந்த தீபாவளி திருநாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு. அனுமனுக்கு ஒரு மண் அகலில் எண்னை விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.

7.திருமணமான பெண்களுக்கு இந்த தீபாவளி திருநாளில் அழகு பொருட்கள் (முக பவுடர், லிப்ஸ்டிக் போன்றவை) தானம் செய்யவும்.

8.இந்த தீபாவளி திருநாள் அன்று அதிகாலை ஸ்நானம் (குளியல்) செய்யும் நீரில் சிறிது பால் கலந்து குளித்தால் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

9. இந்த தீபாவளி திருநாள் பூஜையில் மஞ்சள் கட்டைகளையும் வைத்து பூஜித்து பின்பு அவற்றை பண பெட்டியில் வைத்திருக்கவும்.

10.இந்த தீபாவளி திருநாள் அன்று அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலைஅலங்கரிக்கவும்.
மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.

11.இந்த தீபாவளி திருநாளில் வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.(11 கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீபாவளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்)

12.இந்த தீபாவளி திருநாளில் கீழே கொடுக்கப்பட்ட குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும்.
"ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபாய ஸ்வாஹா"

என்னும் இந்த குபேர மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர வளம் பெருகும்.

13.இந்த தீபாவளி திருநாளில் காலையில் அரச மரத்திற்கு பால் கலந்த நீரை ஊற்றுவது அளவற்ற நற்பயனை பெற்று தரும்.

14.இந்த தீபாவளி திருநாள் (25-10-2022)
அமாவாசை அன்று 
இரவில் அரச மரத்தின் அடியில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து கால்களை அலம்பி வீட்டினுள் செல்லவும். 

15.தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.

16.நம் வீடு / தொழில் செய்யும் இடங்களில் பணபெட்டியை சிகப்பு பட்டு துணியால் அலங்கரித்து மகாலக்ஷ்மிக்கு உகந்த ஆந்தை படத்தை வைத்து மகாலட்சுமி மந்திரத்தை 1008 முறை மனதினுள் கூறி இந்த தீபாவளி திருநாளில் வழிபட்டு வர அனைத்து செல்வங்களும் நினைத்த நேரத்தில் வந்து சேரும்.
மந்திரம் : "ஸ்ரீம் ஸ்ரீம் மகாலக்ஷ்ம்யை நமஹ"

17.பெருமாளின் பாதங்களை தன் கால்களின் மேல் வைத்து வழிபடும் தாயாரின் படத்தை வைத்து இந்த தீபாவளி திருநாளில் வழிபட்டு வர மகாலட்சுமி மனம் குளிர்ந்து நாம் வேண்டியது அனைத்தும் அருள்வார்.

18.இந்த தீபாவளி திருநாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும். 

19.மீன்களுக்கு இந்த தீபாவளி திருநாளில் கோதுமை உருண்டைகள் போட்டு வர நன்மைகள் பெருகும். 
20.ஏழு முக ருத்திராட்சம் இந்த தீபாவளி திருநாளில் அணிந்தால் பணவரத்து இரட்டிப்பாகும். 

21.சிறிய சிகப்பு பட்டு நூலில் ஆல மர வேர் சிறிது வைத்து கட்டி அதை வீட்டு வாயிலில் இந்த தீபாவளி திருநாளில் கட்டினால் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும். 

22.இந்த தீபாவளி திருநாளில் மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகத்தின் முன் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து அதில் ஒவ்வொன்றிலும் ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து விளக்கேற்ற அடுத்த ஒரு வருடத்திற்குள் உங்களுக்கு நிரந்தர செல்வ செழிப்பு உண்டாகும்.

23.இந்த தீபாவளி திருநாளில் ஏழை பெண் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த புத்தாடை எடுத்து தானம் செய்வது தேவியின் மனம் குளிர வழி செய்யும். 
24.முக்கியமாக இந்த தீபாவளி திருநாளிலும், மறு நாள் அமாவாசை நாளிலும் கண்டிப்பாக அசைவம் தவிர்ப்பது அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சிக்கல்கள் இல்லா வாழ்வு தரும். 

25.இந்த தீபாவளி திருநாள் அமாவாசை அன்று மாலை 5.40 முதல் 7.30 வரை மகாலட்சுமி தேவியை பூஜிப்பது ஒரு வருடம் பூஜித்த பலனை பெற்று தரும்.

குறைவிலா செல்வம் பெருக தீபாவளியன்று வீட்டில் செய்ய வேண்டிய லஷ்மி குபேர பூஜை


தீபாவளி திருநாளில் சூரியன் மறையும் 
மாலை நேரத்தில் மஹாலக்ஷ்மியை முறைப்படி பூஜித்து, அவருடன் செல்வத்துக்கு அதிபதியான குபேரனையும் வைத்து பூஜித்தால் குறைவிலா செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்தவகையில், லகக்ஷ்மி குபேர பூஜை செய்யத் தீபாவளி திருநாள் உகந்தது. 

மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். 
லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷ்மியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். 
இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். 

லட்சுமி குபேர பூஜை வழிபடும் முறை!
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் 
வலது பக்கமாக வைக்க வேண்டும். 
அவருக்கு குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். 

விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். 

ஸ்ரீஸுக்தத்திலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட இரண்டு சுலோகங்களும் முறையே லட்சிமியை சரண் அடையவும்,குபேர சம்பத்து பலன் பெறுவதற்கும் உரியது்.

'ஆதித்ய வர்ணே தபஸோதி ஜர்தோ
வனஸ்பதி தவ  
வ்ருகோத பில்வ
தஸ்ய பலாநி தபஸா நுதந்து
மாயாந்தராயாஸ்ச பாஹ்யா அலஷ்மீ'

சூர்யகாந்திக்கு நிகரான தேஜோமயமானவளே! நினது அனுக்கிரஹத்தாலேயே விருஷராஜன் எனப்படும் வில்வ மரம் உண்டாயிற்று. 

அம் மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்; ஜம்புலன்களாலும் உண்டான பாவங்களை நீக்கட்டும்!

"உபைதுமாம் தேவஸக கீர்த்திஸ்ச மணிநாஸஹ
ப்ராதுர்பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மித் கீர்த்திம் ருத்திம் ததாது மே ’ஹேதேவி!" 

தேவி ஸகாயனான மாதவன் எனக்கு அருள் புரியட்டும். கல்வியாலும், செல்வத்தாலும் எனக்குப் புகழ் உண்டாகட்டும் . இவ்வுலகில் பிறந்து விட்டேன் . உன்னையே வேண்டுகிறேன். உன் அனுக்கிரஹத்தால் செல்வக் கோமான் குபேரன் என் நண்பனாகட்டும்! புகழ்க்கன்னி என்னைச் சேரட்டும்! சிந்தித்ததெல்லாம் தரும் சிந்தாமணி என்னுடையதாகட்டும்"
தொடர்ந்து,கீழ்கண்ட குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஸ்ரீகுபேரன் ஸ்துதி 

குபேரம் மநுஜாஸீநம்
ஸகர்வம் கர்வவிக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம்
உத்தராதிபதிம் ஸ்மரேத்.
குபேரனின் அருள் கிட்ட இந்த மந்திரத்தை 
நூற்றியெட்டு(108) முறை துதிக்கவும்.  

SRI KUBERAN STHUTHI.
KUBERAM MANUJAASEENAM
SAKARVAM KARVAVIGRAHAM
SWARNACHCHAAYAM GADHAAHASTHAM
UTHTHARAATHIPATHIM SMARE(Y)TH.

இந்த குபேரன் ஸ்துதியை சொல்லத்தெரியாதவர்கள்
ஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதயே தனதான்ய ஸம்ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!
யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,
செல்வங்களின்
அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள
தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.
என்னும் குபேர மந்திரம்
அல்லது
குபேராய நமஹ… தனபதியே நமஹ.. 
என்று மனதில் துதித்துகொண்டே தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். 
தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர். இருக்கலாம்.
பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை 
கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். 
லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். 
சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை 
விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும்.
நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். 
பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். 
வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! 
குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால்,
108 ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். 
இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும்.  
தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு.
தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.
நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.