ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பெரியார் நகரில் வீட்டில் புகுந்த 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் நேற்று பிடித்து அம்மூர் வன காப்புக்காட்டில் விட்டனர்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பெரியார் நகரில் உள்ள பேரரசி என்பவர் நேற்று சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தனது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. எனவே அதனை மீட்குமாறு உதவிகோரினார்.
இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அ.மஹபூப்பேக் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடிப்பார்த்தனர். அப்போது சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையின் கருவிக் கொண்டு பாம்பை உயிருடன் பிடித்து அம்மூர் காப்புக்காட்டில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.