வேலூர் மாவட்டம் திருவலம் டவுன் பஞ்.ல் உள்ள அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரசவ வார்டு, ஆபரேஷன் தியேட்டர்களை ஆய்வு செய்தனர்.
அக்கட்டடங்கள் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு ஒழுகுவதாக டாக்டர்கக்களும் கூறினர். அக்கட்டடங்களின் நிலையை நேரில் தெரிந்து கொண்ட அமைச்சர்கள் ஷாக் அடைந்தனர்.
அதன் கான்டிராக்டர் யார் என அமைச்சர் துரை முருகன் கேட்டார். பெயரைக் கேட்டதும் மேலும் கோபமடைந்தார். பொதுப்பணி துறை அதிகாரியை அழைத்து கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, வேலூர் கலெக்டர் குமார வேல்பாண்டியன், எம் எல் ஏ நந்தகுமார், மருத்துவ பணிகள் துணை இயக்குநர் பானுமதி, திருவலம் டவுன் பஞ். தலைவர் சாமுண்டீஸ்வரி ரவி, துணைத்தலைவர் நேரு, காட்பாடி பஞ். துணைத் தலைவர் சரவணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் ராணிநிர்மலா மருத்துவ குழுவினர், துணைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.